Tuesday, June 15, 2010

கொழும்பு வட்ட லியோ கழத்தின் சார்பில் ஒரு சிறு வேண்டுகோள்



எமது கொழும்பு வட்ட லியோ கழத்தின் சமூக சேவை செயற்பாடுகள் பெரும்பாலும் கல்வி, சிறுவர், முதியோர் சாரந்திருப்பதுடன் கடந்த 18 வருடங்களாக கொழும்பு, யாழ் மற்றும் மலையக பகுதிகளில் செயற்படுத்தப்பட்டுவருகின்றன. இத்தகைய செயற்பாடுகளுக்கு கழக அங்கத்தவர்களின் மனிதவளத்தையே முக்கிய மூலதனமாக நாம் பயன்படுத்தினாலும், பல செயற்பாடுகளுக்கு நிதித்தேவைகளும் உள்ளன. இந்த நிதி பெரும்பாலும் கழக அங்கத்தவர்களின் பங்களிப்பாக உள்ளபோதும், இளைஞர்களாகிய எம்மால் பெரும் செயற்திட்டங்களுக்குரிய நிதியை திரட்டமுடிவதில்லை.

இதனால் எமது கொழும்பு வட்ட லியோ கழத்தின் சமூக சேவை செயற்திட்டங்களுக்கு நிதி திரட்டும் முகமாக புதிதாக வெளிவர உள்ள "இராவணன்" படத்தின் ஒரு திரைப்பட காட்சியை குத்தகைக்கு எடுத்து, அந்த காட்சியின் மூலம் திரட்டபடும் நிதியிருந்து பல சமூக நல செயற்பாடுகளுக்கும் உதவி தேவைப்படுவோருக்கு உதவவும் திட்டமிட்டு இருக்கிறோம். கடந்த முறை(14/01/2009) திரையிடப்பட்ட திரைப்படக்காட்சியின் மூலம் திரட்டப்பட்ட தொகை மூலம் சிறு குழந்தையின் சத்திர சிகிச்சைக்கும், இடம் பெயர்ந்தோர் முகாம்களில் 2009 A/L பரிட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களுக்கு 10000 வினாத்தாள்கள், 1000 பேனைகள் மற்றும் போசாக்குள்ள வீவா (VIVA) பானம் என்பன வழங்க பயன்பட்டது. இம்முறையும் இந்த திரைப்பட காட்சிக்கு உங்களின் பங்களிப்பை அளிப்பதன் மூலம் மேலும் பல சமூக நல செயற்திட்டங்களை முன்னெடுக்க உங்களின் சிறு ஆதரவை எதிர்பார்க்கிறோம். சிலருக்கு பிடிக்காத / பொருத்தமில்லாத ஒரு வேண்டுகோளாக இது இருந்தாலும், உங்களின் சுயவிருப்பின் பேரில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

காட்சியிடல் விபரங்கள்:
திகதி: 19/06/2010 (சனிக்கிழமை)
நேரம்: காலை 10.30
இடம்: பிரீமியர் கொன்கோட் திரையரங்கு, தெகிவளை
திரைப்படம்: இராவணன்
நுழைவுச்சீட்டு கட்டணம்: ரூ 700 (பல்கனி), ரூ 420 (ஓ.டி.சி.)
மேலதிக தொடர்புகளுக்கு: வசந்த் (0774074494) / மிருணன் (0776672043) / துஷி (0775024666)

குறிப்புக்கள்:
நுழைவுச்சீட்டுக்ளைப்பெறவும், இது தொடர்பில் விமர்சனங்கள், கேள்விகள் இருந்தாலும் தொடர்புகொள்ளலாம்.
இத்தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,
லியோ கழக உறுப்பினர்கள்


No comments: